--- --:--:-- --

பைக் மீது சானிடைசர் தெளிக்கப்பட்ட போது திடீரென தீ விபத்து!

14

குஜராத் மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்ததால் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. அகமதாபாத்தில் உள்ள அரவிந்த் மில்லிற்கு வரும் பணியாளர்களின் வாகனங்களில் சானிடைசர் தெளிக்கப்படுகிறது. அப்போது ஒரு பணியாளர் நீண்ட நேரம் தனது இரு சக்கர வாகனத்தை இயக்கிய பின்னர் மில்லிற்க்கு வந்தார்.

 

அப்போது அவரது வாகனத்தில் சானிடைசர் தெளிக்கப்பட்டபோது என்ஜினில் ஏற்பட்ட சூட்டின் காரணமாக திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அந்த இளைஞர் கீழே விழுந்து பின்னர் எழுந்து ஓடினார். அங்கிருந்த காவலாளிகள் நெருப்பில் இருந்து இரு சக்கர வாகனத்தை காப்பாற்றினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon