--- --:--:-- --

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை! பொதுமுடக்கம் நீட்டிப்பா?

1

தமிழ்நாட்டில் கொரொனா அச்சுறுத்தல் மற்றும் பொது முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் களுடன் முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டறிய உள்ளார். 50க்கும் மேற்பட்ட நாட்களாக பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையில் மக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

 

தற்போதைய சூழலை பொருத்த வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் பெரும்பாலும் தொற்று கண்டறியப்படுகிறது.

 

இந்தநிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பொது முடக்கத்தை மேலும் நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து வரும் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று முன்னதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

Leave a Reply

Right Menu Icon