மதுபோதையால் கொடூரம் நண்பனை குத்திக் கொன்ற இருவர் கைது!
திருச்சி அருகே மது போதையில் நண்பர்களுக்கு ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். குலுமணி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரது வீட்டில் அவரும் அவரது நண்பர்களான ரமேஷ், விஜயகுமார் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறிய நிலையில் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மாணிக்கம், விஜயகுமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணிக்கத்தையும் ரமேஷையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.







