--- --:--:-- --

கொரோனா ஓய்ந்தால் தான் கல்லூரிகள் திறக்கப்படும்!

10

கொரோனா முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும் என்று கூறியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

 

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக மே 31-ஆம் தேதிக்குள் முடிவை தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் நேற்று தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

 

இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்துக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழக இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து தெளிவான விளக்கம் கிடைத்தால் மட்டுமே தமிழக அரசு முடிவெடுக்கும் என்று மத்திய அரசின் கால அவகாசத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை என்றும் அன்பழகன் கூறியுள்ளார்.

 

சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் வரும் 27ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்குப் பின்னர் பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon