--- --:--:-- --

தைல காட்டில் காயங்களுடன் சடலமாக கிடந்த சிறுமிக்கு நடந்தது என்ன?

14

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமி தைல மரக் காட்டில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

குளத்திலிருந்து குடிக்க நீர் எடுத்துவரச் என்ற 13 வயது சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் மரணத்திற்கு காரணம் யார்? புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. குடிநீர் பிரச்சனை என்பது அப்பகுதி மக்கள் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு குளத்திலிருந்து நீர் எடுத்து வருவது வழக்கம்.

 

அதே கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் குடிநீர் எடுப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பயந்துபோன பெற்றோர் குளத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமியை காணாததால் அருகே உள்ள தைல மர காட்டிலும் தேடியுள்ளனர்.

 

அங்கு சிறுமி கழுத்து மற்றும் உடலில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை பார்த்து பயந்து உள்ளனர். சிறுமியை மீட்டு உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் அந்த பகுதியில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

 

மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதற்கிடையே தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள் நள்ளிரவு ஒரு மணிக்கு சிறுமி உயிரிழந்தார். மாவட்ட எஸ்பி அருள்ஜோதி குமார் கூறுகையில் சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என்றும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே உடற்கூறு ஆய்வில் முதற்கட்ட அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குளத்தில் தண்ணீர் எடுத்துவர சென்ற சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon