--- --:--:-- --

மகன் கொலை செய்யப்பட்டதை தட்டி கேட்க சென்ற தந்தை மற்றும் இளைய மகனும் கொலை!

6

கோவில்பட்டி அருகே குடிபோதையில் மகன் வெட்டப்பட்டதை தட்டி கேட்க சென்ற தந்தை மற்றும் மகனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. குற்றவாளிகள் யார்? மூத்த மகன் அரிவாளால் வெட்டப்பட்டார் என்ற தகவல் கேள்விபட்ட தந்தையும் இளைய மகனும் என்ன நடந்தது என்று தட்டிக் கேட்கப் போன இடத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

இரட்டை படுகொலை நடந்தது எப்படி? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது கருப்பசாமி .இவருக்கு நான்கு மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் 40 வயதான காளிசாமி, விவசாயக் கூலித் தொழிலாளியாக உள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு நடந்து வந்துள்ளார்.

 

காளி சாமி வழியில் பிள்ளையார் கோவில் அருகே அதே கிராமத்தை சேர்ந்த தீப்பெட்டி ஆலையில் வேலை பார்க்கும் 22 வயதான பாலமுருகன் இருந்துள்ளார். மதுபோதையில் இருந்த பாலமுருகனுடன் காளிசாமி பேசிக்கொண்டு இருந்தார். திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பு ஏற்பட்டு பாலமுருகன் அரிவாளால் வெட்டியுள்ளார்.

 

அருகில் இருந்தவர்கள் இருவரையும் பிரித்து விட்டு காளி சாமியை பசுவந்தனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மகன் காளிசாமி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அவரது தந்தை கருப்புசாமி மற்றும் தம்பி 25 வயதான மகராஜன் இருவரும் இந்த பிரச்சனை தொடர்பாக பேசுவதற்காக பாலமுருகனை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

 

இருவரும் வீட்டிற்கு சென்று கேட்டபோது ஆத்திரமடைந்த பாலமுருகன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கருப்புசாமி மற்றும் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் விழுந்த கருப்பசாமியும் மகராஜன் அங்கேயே உயிரிழந்தனர். தகவலறிந்த பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு சடலங்களையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலமுருகனை தேடி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறு தான் கொலைக்கு காரணமா அல்லது முன்பகை உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon