--- --:--:-- --

தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்தது!

11.2

தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 490 ஆக உள்ளது.இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று மட்டும் 364 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 19 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழு பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் ஏர்போர்ட் குவாரண்டின் பகுதிகளில் தலா ஐந்து பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தலா 4 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா 3 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அரியலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இன்று மட்டும் தமிழகத்திற்கு ஒரு நிதி உதவி செய்பவர்கள் எண்ணிக்கை 490 ஆக உள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்து உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon