ஜூன்.12-இல் மேட்டூர் அணை திறக்க உத்தரவு !
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேட்டூர் அணை திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ஓஎஸ் மணியன், துரைக்கண்ணு ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகம், வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்துஜூன் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். டெல்டா விவசாயிகளுக்கு தேவையான 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தேவையான நெல் விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த நேரத்தில் நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பதன் மூலம் இந்த ஆண்டு குறுவை சாகுபடி மூலம் 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள 5.60 லட்சம் மெட்ரிக் டன் மகசூல் கிடைக்கும் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.






