--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதம்!

1.1

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எழுதியிருக்கும் கடிதத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு அறிவித்துள்ள சுயசார்பு திட்டங்கள் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

 

மத்திய அரசின் நிதி உதவிகளை எதிர்பாராமல் மாநில அரசு சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யக்கூடாது என்று விவசாயிகளுக்கு மின் வாரியத்தின் முடிவை மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு தமிழகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இது தொடர்பாக ஒருமித்த முடிவு எடுக்கப்படும் வரை மின்துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ள கூடாது என்று சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon