முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை மற்றும் நலிவுற்ற கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்!
இராமநாதபுரத்தைச் சேர்ந்த ச.ஷர்மிளா என்ற சிறுமியின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மேல்சிகிச்சை மேற்கொள்ளவும் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கின் காரணமாக பொருளாதார ரீதியாக அவர்களின் குடும்பம் சிரமப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்த சிறுமிக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ .15,000/-நிவாரண உதவித் தொகையும் , ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சிறுமியின் தாய்க்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய முறையில் மேற்கொண்டு கண்காணித்திட இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித் தலைவர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 பயனாளிகளுக்கு தலா ரூ .50,000/-வீதம் 1 இலட்சத்திற்கான காசோலையினையும் , 35 நலிவுற்ற கலைஞர்களுக்கு தலா 15 கிலோ அரிசி , 1 கிலோ பருப்பு , 1 லிட்டர் சமையல் எண்ணெய் வீதம் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் , மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ச.ஷர்மிளாவிற்கு ரூ .15,000 / -க்கான உதவித் தொகை மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் வழங்கினார்.

அதேபோல , நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை போதிய சமூக இடைவெளியுடன் வழங்கிட ஏதுவாக இராமநாதபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ள கருவியினையும் , தானியங்கி கிருமி நாசினி விநியோகிக்கும் மின்னணு கருவியினையும் பார்வையிட்டார் .






