நேற்றைய டாஸ்மாக் வருமானம் 133 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
நேற்று முன் தினம் மட்டும் 163 கோடிக்கு மது விற்பனை ஆனது.இந்நிலையில், நேற்றைய டாஸ்மாக் வருமானம் 133 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை வருமானத்தை காட்டிலும் 30 கோடி குறைந்து காணப்படுகிறது.
சென்னை – 5.6 கோடி,
திருச்சி – 32.5 கோடி,
மதுரை – 34.8 கோடி,
சேலம் – 29.6 கோடி,
கோவை – 30.6 கோடி
நேற்றைய வருவாய்133.1கோடி ரூபாய்
இதுவரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என இருந்த நிலையில் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இனி டாஸ்மாக் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






