--- --:--:-- --

திமுக மாவட்ட செயலாளர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு !!!

18

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிவாரணம் வழங்குவதற்காக பொருட்களை ஏற்றி வந்த வாகனம் மோதி மாரி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும்,ஒருவர் படுகாயமடைந்தார்.

 

இந்த நிலையில் விபத்தில் பலியான வரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக கோவை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் சேனாதிபதி,இளைஞரணியினை சேர்ந்த தியாகு உள்ளிட்ட பலர் இன்று சென்றுள்ளனர்.

ஆறுதல் தெரிவிக்க சென்ற கோவை புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சிஆர்.இராமசந்திரன், ஒன்றிய செயலாளர் சேனாதிபதி, இளைஞரணி தியாகு உள்ளிட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.அப்போது,இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.இதனையடுத்து காவல் துறையினர் மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்தனர்.இதனால் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon