பிச்சை எடுத்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு சேர்ந்தவர் பூல் பாண்டியன். பல ஊர்களுக்குச் சென்று பிச்சை எடுத்து அதில் தனது போக மீதித் தொகையைச் சேமிப்பது இவரது வழக்கம். சேமிப்பில் குறிப்பிட்ட தொகை சேர்ந்ததும், நல்ல காரியங்களுக்காக செலவிட்டு வந்துள்ளார். இதன்படி பல பள்ளிகளுக்கு டேபிள், சேர், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.

 

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த அவர், இங்கு பல இடங்களிலும் பிச்சை எடுத்துள்ளார். இந்நிலையில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில் சாலைகளில் தங்கிய ஆதரவற்றவர்கள், மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைத்தில் இருந்த பூல்பாண்டியனையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.

 

தற்போது தங்கும் இடத்தில் வந்துள்ள நிலையில் தான் சேமித்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.


Leave a Reply