--- --:--:-- --

வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்களை ஏற்றி வந்த பேருந்து நடுவழியில் இறக்கி விட்டதால் பரபரப்பு!

16

இரு பேருந்துகளில் வட மாநிலங்களில் பணிபுரிந்த தமிழர்களை ஏற்றி வந்த போது ஓட்டுனரால் சிவகங்கை அருகே இறக்கி விட்டுச் சென்றதால் பரபரப்பு! நடு வழியில் நின்ற 29 பேரை மீட்டு அதிகாரிகள் தனிமைப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொரானா வைரஸ் தாக்குதலால் வெளிமாநிலங்களில் சிக்கித்தவித்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து பல்வேறு குழுக்களாக பேருந்துகளில் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அரசு அனுமதியுடன் பேருந்து ரயில்களில் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வட மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இரு பேருந்துகளில் அழைத்துவரப்பட்டனர். அவர்களை சொந்த மாவட்டங்களில் இறக்கிவிடப்பட்ட ஓட்டுனர்கள், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 29 நபர்களை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து வரும் போது சிவகங்கை புறநகர்ப் பகுதியில் நடுவழியில் இறக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தகவலறிந்த சம்பவ இடம் வந்த அதிகாரிகள், மாற்று பேருந்துகள் மூலம் அவர்களை தனி முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக அவர்களது சொந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon