என்ஜின் பழுதானதால் சுற்றிச் சுழன்று தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்!

கனடாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய விமானம் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் வழக்கம்போல விமான தளத்தில் இருந்து புறப்பட்ட அடுத்த சில நொடிகளில் கோளாறு ஏற்பட்ட ஒரு விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி விழத்தொடங்கியது.

 

அப்போது சுதாகரித்துக் கொண்ட விமான ஓட்டி பாரசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். சுற்றி சுழன்று விழுந்த அந்த விமானம் குடியிருப்பு பகுதிக்கு அருகில் விழுந்து விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.


Leave a Reply