--- --:--:-- --

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா!

13

பாகிஸ்தானில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேர் வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் கொரொனா பாதிப்பினால் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 870 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பிரதமர் இம்ரான்கான் வசிக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பணியாளர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

 

முதற்கட்ட பரிசோதனையில் பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் 4 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பிரதமர் அலுவலகத்தில் பதிவான இரண்டாவது கொரொனா பாதிப்பாகும். இதையொட்டி பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்களுக்கு உடனடியாக பரிசோதனையை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon