--- --:--:-- --

வீட்டின் உரிமையாளரிடம் இருந்து நாய்க்கு பரவிய கொரோனா!

1

அமெரிக்காவில் கொரொனாவால் பாதித்தவரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்த நிலையில் அந்த நாட்டுக்கு ராணுவ விமானம் மூலம் மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை துருக்கி அனுப்பி வைத்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது உலக நாடுகளிடம் மருத்துவ காரணங்களுக்காக கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மருத்துவ பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் துருக்கியில் இருந்து புறப்பட்ட ராணுவ விமானம் மேரிலாந்தில் உள்ள விமானப்படை தளத்தில் தரை இறங்கியது. முகக் கவசங்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு கவச உடைகள் துருக்கியில் இருந்து வந்து அடைந்ததாகவும் இது இரவு பகல் பாராமல் எதிர்த்துப் போராடும் மருத்துவ பணியாளர்களின் உயிரை காக்க உதவும் என்றும் அமெரிக்காவுக்கான தூதர் கூறியுள்ளார்.

 

கொரொனா வைரஸ் பரவலை சீனா தடுக்கத் தவறியதால் 184 நாடுகள் நரகத்தில் சிக்கி இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய டிரம்ப் கொரொனா வைரஸை சீனாவிலேயே தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் தற்போது சீனா உலகம் முழுவதும் கண்களுக்குத் தெரியாத எதிரியை பரப்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதனால் பெரிய அளவில் பொருளாதார இழப்பையும் சீனா ஏற்படுத்தியுள்ளதாக மீண்டும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கொரொனா தொடர்பான சீனாவில் செயல்பாட்டில் தங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ள டிரம்ப் சீனாவிலிருந்து கொரொனா தொடர்பாக தமது நிர்வாகம் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய நேரத்தில் அது குறித்து விபரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

அமெரிக்காவில் முதல் முறையாக நாய்க்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வடக்கு கரோலினாவில் வீட்டின் உரிமையாளருக்கு கொரொனா உறுதியான நிலையில் அவரிடம் இருந்த நாய்க்கு பரவியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் கொரொனா பாதித்தவரிடம் நாய் உறங்கிய தாகவும் அவர் உணவருந்திய தட்டிலேயே நாயும் சாப்பிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

 

ஏற்கனவே ஹாங்காங்கில் இரண்டு நாய்களுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலி மற்றும் பூனைகளுக்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon