உணவில்லாததால் சொந்த ஊருக்கு 150 கி.மீ நடை பயணம்…!
விவசாய வேலைக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல நடந்தே பயணம் செய்த அவலம் நடந்துள்ளது. சொந்த ஊரை நோக்கி அவர்களை தள்ளியது எது? கைகளை அழுத்தும் பைகள், தளர்ந்த நடை, தலைக்குமேல் கொளுத்தும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் இவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.
முக்கிய சாலைகளை கடந்து கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் சொந்த ஊரை எட்டி விடும் வேகத்தில் நடைபோடும் இவர்களின் முகங்களில் நாளைய தினம் குறித்த கவலை தெரிகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலை பகுதியில் மஞ்சள் அறுவடை பணிக்காக சென்ற இந்த தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் வேலையும் வருமானமும் இல்லாமல் ஈரோடு மாவட்டத்திற்கு சென்ற இவர்களை தற்போதைய பொதுமுடக்கம் மீண்டும் சொந்த ஊரை நோக்கி தள்ளி விட்டுள்ளது.

பிழைக்க வந்த இடத்தில் வேலையில் வருமானமும் அற்றுப் போனதால் அங்கிருந்து நடந்தே சொந்த ஊர் புறப்பட்டனர். அவர்கள் ஏறத்தாழ 150 கிலோமீட்டர் தொலைவிற்கு நடந்தபடியே கொல்லிமலையை அடைந்தனர். தொழிலாளர்கள் தங்களை போல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளி மாநிலங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் சென்று தவிப்பதாக இவர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.
இவர்களைப் போலவே மஞ்சள் அறுவடை பணிக்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சிறந்த 15 தொழிலாளர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வேலை பார்த்து வந்தனர். பொதுமக்கள் வேலையும் வருமானமும் இன்றி தவித்துள்ளனர். ஆதரவற்ற நிலையில் பெட்டி படுக்கையுடன் திருக்கோவிலூரை நோக்கி அவர்களது கால்கள் நடை போடத் தொடங்கியது. அதிலும் மாற்றுத்திறனாளி தாயை தோளில் வைத்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்று உள்ளார் ஒரு தொழிலாளி.







