கொரோனாவுக்கு புதிதாக தோன்றும் 6 அறிகுறிகள் என்னென்ன…?
கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு புதிதாக ஆறு வகையான அறிகுறிகளும் ஏற்பட கூடும் என்று அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது. உலகை தொடர்ந்து கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்த நிலையில் வைரசால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு புதிதாக ஆறு வகையான அறிகுறிகள் உடலில் ஏற்படும் என்று அமெரிக்காவில் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.
அதன்படி கடுமையான குளிர், குளிர் நடுக்கம், தசை வலி, தலைவலி, தொண்டைவலி, சுவை அல்லது நுகரும் தன்மை இழப்பு ஆகிய அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் உடனே கொரொனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப் படுத்திக் கொள்வது சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இருமல், காய்ச்சல், அதிக உடல் வெப்பம், சுவாசக் கோளாறு ஆகிய பிரச்சினைகள் இருந்தால் கொரொனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் பட்டியலை வெளியிட்டிருந்தது.
இதனிடையே உலகம் முழுவதும் சிலருக்கு அறிகுறிகள் இல்லாமலும் வைரஸ் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அந்த அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை என்றும் இந்த அறிகுறிகள் பொதுவான உடல்நல பாதிப்புகள் ஆகவும் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.







