சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளுக்கு தேர்வு எப்போது?
ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு எஞ்சியுள்ள சிபிஎஸ்இ, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஜாக்கிடம் ட்விட்டர் மூலம் லக்னோவை சேர்ந்த ஒருவர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு ரமேஷ் போக்ரியால் அளித்துள்ள பதிலில் நாடு தழுவிய ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதும் சிபிஎஸ்சி தேர்வு குறித்த அட்டவணையை மத்திய அரசு வெளியிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கில் வீடுகளில் இருக்கும் மாணவர்களை நாள் முழுவதும் படிக்கும்படி பெற்றோர் கட்டாயப்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ள அவர் எப்போது தேர்வு அறிவிக்கப்பட்டாலும் அதற்கு தங்களது பிள்ளைகளை தயார் நிலையில் வைத்திருந்தால் போதும் என்றும் அவர் கூறியுள்ளார்.







