‘ரேபிட் டெஸ்ட்டை நம்ப வேண்டாம்..! பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்!
கொரொனா சோதனைக்கு ராபிட் டெஸ்ட் கருவிகளை நம்பியிருக்காமல் பிசிஆர் பரிசோதனைகளை இந்தியா மேற்கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரொனா தொற்று உறுதிப் படுத்தப் பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை சேர்ந்தவர்கள், தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புடையவர்கள், அறிகுறி உள்ளவர்களுக்கு தான் தற்போது சோதனை நடப்பதாகவும் இது 4 முதல் 5 சதவீதம் என்று கூறியுள்ள சௌமியா ஸ்வாமிநாதன், பிற நாடுகளில் 30 முதல் 40 சதவீதம் பேருக்கு சோதனை நடப்பதாகவும் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் இந்தியா உரிய நடவடிக்கை எடுத்தாலும் சோதனையிடும் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தரமற்ற, உறுதிப்படுத்தப்படாத கருவிகளை பரிசோதனைக்கு பயன்படுத்துவதை காட்டிலும் மூலக்கூறு சோதனை அதாவது பாலிமியர்ச் செயின் ரியாக்ஷன் சோதனை நல்ல தரத்துடன் கலவரத்தை உறுதிப் படுத்துவதாக கூறியுள்ள சௌமியா சுவாமிநாதன் இதன் மூலம் தொற்றுக்கு உள்ளானவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.






