ஊரடங்கு காலத்தில் 25 அடி ஆழத்தில் கிணறு தோண்டிய தம்பதி!
மகாராஷ்டிராவை சேர்ந்த ஒருவர் ஊரடங்கின் போது வீணாக பொழுதை போக்காமல் வீட்டு அருகே 25 அடி ஆழ கிணற்றை தோண்டியுள்ளார். கொரொனா பரவலைத் தடுக்க மார்ச் 25 முதல் மே 3 வரை 40 நாட்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. வேலை செய்த ஆட்கள் வீட்டில் சும்மா இருக்க முடியாது எனக் கூறுவர். அதற்கு எடுத்துக்காட்டாக மகாராஷ்டிரத்தின் பாசிங் மாவட்டத்தில் கார்கேடா என்ற ஊரில் கஜானன் என்பவரும் அவரது மனைவியும் வீட்டருகே ஒரு கிணற்றை தோண்டியுள்ளனர்.
இயந்திரங்கள் எதுவும் இன்றி கடப்பாறை, சம்மட்டி, மண்வெட்டி ஆகிய கருவிகளைக் கொண்டு 21 நாட்களில் 25 அடி ஆழ கிணறு தோண்டியுள்ளனர். தொடக்கத்தில் இதை ஏளனம் செய்தவர்கள் 25 அடி ஆழத்தில் தண்ணீரைக் கண்டதும் தங்களை பாராட்டுவதாக கஜனன் தெரிவித்துள்ளார்.






