கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்!
தனியார் பள்ளிகள் கல்வி கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என மத்தியமனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அவர் பதிவிட்டுள்ளார். கல்விக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ள பள்ளிகள் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் ஊரடங்கு காலகட்டத்தில் கட்டணங்கள் வசூலிப்பதை பள்ளிகள் கைவிட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளூர், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். பொது இடங்களில் எச்சில் துப்பினால் சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் ஒருவரும், நான்கு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் மலர்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் அத்தியாவசியப் பணிகளுக்காக வெளியே வரும் மக்கள் கட்டாயமாக கவசம் அணிய வேண்டும் என்றும், தவறினால் 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







