--- --:--:-- --

சமூக விலகலை கடைபிடிக்காத கடைகள்,நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் — ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை !!!

14

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் ராசாமணி மற்றும் கமிஷனர் சுமித் சரண் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது,பேசிய மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு 127 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.26 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.765 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.101 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,கொரோனா தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட பகுதிகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும்,
கோவை மாவட்டத்தில் 18 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பேசினார்.
மேலும்,கோவையில் 2000 பேர் கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்
அதில் 1800 பேருடைய முடிவுகள் கிடைத்ததில் ஒருவருக்கு மட்டும் பாசிட்டீவ் வந்துள்ளது எனவும்,
கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் ஜீரோ என்கிற நிலை வருவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என தெரிவித்த அவர், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், உபகரணங்கள் அரசு மருத்துவமனையில் தேவையான அளவு உள்ளது எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வணிகர்கள், தன்னார்வலர், பொதுமக்கள் சார்பாக 11 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது.பொதுமக்கள் அத்யாவசிய தேவையின்றி சாலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும்,அத்தியாவசிய பொருட்களை பதுக்கினாலோ,அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,சமூக விலகலை கடைபிடிக்காத கடைகள்,நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை விடுத்தார்.

 

மேலும்,கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும்,மீறி வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்,பொதுமக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் வீடு தேடி செல்லும் வகையில் நடமாடும் வாகனங்கள் மாவட்ட நிர்வாக தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அத்யாவசிய பொருட்கள் பதுக்கல், கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பேசினார்.

 

மேலும்,நியாயவிலைக் கடைகளில் 100 விழுக்காடு பொது விநியோக உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளது எனவும், எடை குறைப்பு,நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் இல்லை என தெரிவிக்கும் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.பின்னர்,பேசிய கோவை கமிஷனர் சுமித் சரண் கோவை மாநகரில் ஊரடங்கை மீறியதாக 2800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon