--- --:--:-- --

முக கவசம் அணியாமல் சென்றால் 3 ஆண்டுகள் சிறை

6

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் முகக் கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது. கொரொனா பரவலை தடுக்கும் விதமாக அகமதாபாத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் இன்று முதல் பொது இடங்களுக்கு செல்வோர் முக கவசம் அணியுமாறு அகமதாபாத் நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். முகக் கவசம் இல்லாமல் செல்வோருக்கு தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தர வழி வகை செய்யப்படும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon