ஊழியர்களுக்கான கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் அமேசான்
மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான் நிறுவனம் தங்களது ஊழியர்களை கொரொனாவிடமிருந்து பாதுகாக்க அமெரிக்காவில் புதிய ஆய்வகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை திரட்டி வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
சிலருக்கு அறிகுறிகள் தென்படும் நிலையில் வைரஸ் வருவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியம் என்றும் அமேசான் கூறியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 7 லட்சம் ஊழியர்களும் சோதனைக் உட்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கும் அமேசான் நிறுவனம் தேர்வு செய்யப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
மேலும் வைரஸ் தொற்று ஏற்பட அவர்கள் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊரடங்கால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் திருவள்ளூரில் தன்னார்வலர் ஒருவர் ஒரு கிலோ காய்கறிகளை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது வரவேற்ப்பை பெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காய்கறி சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் லாரிகளில் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூரில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தநிலையில் திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியில் தன்னார்வலர் ஒரு கிலோ காய்கறிகளை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
விலை உயர்வால் பாதிக்கப்படுவோரின் கஷ்டங்களை குறைக்கும் வகையில் தக்காளி, வெங்காயம், மாங்காய், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இதனால் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.





