--- --:--:-- --

“ரூ.500 விலையில் 19 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு!!” ரேசன் கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு!!

3be7adab-f224-402f-a0cb-7e4a17ee98ee

ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ள நிலையிலும், மக்கள் மளிகைக் கடைகளுக்கு படையெடுப்பதை தடுக்கும் பொருட்டும் ரேசன் கடைகளில் 500 ரூபாய்க்கு 19 மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பால் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு போடப்பட்ட ஊரடங்கு 2த்தரவு வரும் 14-ந் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஊரடங்கு காரணமாக, காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதால் விலைவாசியும் கணிசமாக உயர்ந்து மக்களை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

 

இதனால், அத்தியாவசியப் பொருட்கள் பொது மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ 500 மதிப்புள்ள இந்த மளிகைப் பொருட்கள் வெளிச்சந்தை விலையை விட ரூ.100 வரை குறைவாக இருக்கும் என புள்ளி விபரத்துடன் விலைப் பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த மளிகைத் தொகுப்பில், அரை கிலோ துவரம்பருப்பு, அரைகிலோ உளுத்தம் பருப்பு, கால் கிலோ கடலை பருப்பு, மிளகு 100 கிராம், கடுகு100கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம் மற்றும் டீதூள், மஞ்சள்தூள் உப்பு, பூண்டு உள்ளிட்ட 19 பொருட்கள் அடங்கியுள்ளன.

 

இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகள் தயாரானவுடன் விரைவில் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த மளிகைப் பொருட்கள் தரமாக இருக்கும் பட்சத்தில், தற்போதைய சூழலில் மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமிருக்காது என்பது உறுதி என்றே தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon