நிறம் மாறிக் கொண்டு வரும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறைகள்
ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கிரேட் பாரியர் இஸ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நிறம் மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் வெப்பநிலை கடல் நீரில் காணப்படும் நீரோட்டங்களின் திசை மாறுபாடுகள் மற்றும் மனிதர்களுக்கு மாசுபாடு காரணமாக பவளப்பாறைகள் நிறம் மாறுவதாக ஜேன்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கே இருந்து 2300 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கிரேட் பாரியர் இஸ் எனப்படும் பவளப்பாறைகள் வெளிர் நிறத்திற்கு மாறி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மாறுபாடு பவளப்பாறைகளை உடனடியாக அளிக்காவிட்டாலும் வெப்பநிலை அதிகரிக்கும்போது பவளப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும் மூன்றாவது பெரிய நிகழ்வு இது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.







