ஸிவிக்கி, ஜோமாட்டோ மூலம் இனி காய்கறி விற்பனை!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக சுவிகி, ஜோமாட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளில் காய்கறிகள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் 16 வகைகள் மற்றும் ஐந்து வகை பழங்கள் கொண்ட தொகுப்பை இந்த மூன்று நிறுவனங்கள் மூலம் வெளியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 10ஆம் தேதி முதல் வீடு வீடாக சென்று இலவச அரிசி மற்றும் பருப்புகள் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ இலவச அரிசி மற்றும் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ பருப்பு என்ற அளவில் மூன்று மாதங்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

தொடர்ந்து புதுச்சேரியில் மேற்கண்ட இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு விரைந்து மேற்கொண்டது. அதன் அடிப்படையில் வரும் 10ஆம் தேதி முதல் இலவச அரிசி மற்றும் பருப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.







