டெல்லியில் இருந்து தஞ்சை வந்த செய்தியாளருக்கு கொரொனா!
டெல்லியில் பணியாற்றும் தஞ்சையை சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் தனியார் ஊடகம் ஒன்றில் உச்சநீதிமன்ற செய்தியாளராக பணியாற்றி வந்த 28 வயது நிரம்பியவர் கடந்த 24 ஆம் தேதி விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளார். அவர் பயணித்த விமானத்தில் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களும் இருந்ததால் தானாக முன்வந்து தகவல் தெரிவித்ததால் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
சோதனையில் அவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வரும் வாகனங்களுக்கு குமுளி சோதனைச் சாவடியில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவிற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன.

சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் அதிக நோய் தொற்று இருந்ததால் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் நோய்த்தொற்று கேரளாவை விட அதிகரித்திருக்கும் சூழலில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இன்றியமையாப் பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு தமிழக கேரள எல்லையை இணைக்கும் கேரள குமுளி சோதனைச்சாவடியில் கேரள காவலர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் சார்பில் ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
வாகன ஓட்டுனருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட வைரஸ் அறிகுறிகள் இருக்கின்றனவா எனும் சோதனை சோதிக்கப்பட்டு வாகனங்கள் அனுப்பப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேவையற்ற பயணங்களை மேற்கொண்டு அவர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களை கொரொனா விழிப்புணர்வு வாசகங்களை பலமுறை கூறுமாறு செய்தனர்.
கொரொனா முன்னெச்சரிக்கையாக நிலக்கோட்டை, வத்தலக்குண்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவலர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை சாலையில் வரைந்துள்ளனர். இந்நிலையில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளும் அவர்களை பிடிக்கும் காவலர்கள் வீட்டில் இருப்போம் ஒழிப்போம் என்ற வாசகங்களை பலமுறை செய்தனர்.







