வாட்ஸ் ஆப் ஃபார்வார்டிற்கு புதிய கட்டுப்பாடு!
கொரொனா குறித்த வதந்திகள் பரவலை தடுக்கும் வகையில் அதிகளவில் பகிரப்படும் செய்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதிகளவில் பகிரப்படும் செய்திகளை தற்போது ஐந்து நபர்கள் அல்லது குழுக்களுக்கு ஒரே நேரத்தில் செய்ய முடியும்.
இதனை ஒன்றாக குறைக்க வாட்ஸ்அப் நிறுவனம் முடிவு செய்துள்ளது .ஒரு செய்தியை மற்றவர்களுக்கு பகிரும் போது இரண்டு ஏரோக்கள் வந்தால் அது அதிகளவில் பகிரப்பட்ட செய்தி என்று அறிந்து கொள்ளலாம். இது தவிர ஒரு செய்தியை மற்றவர்களுக்கு பகிரும் போது அதன் உண்மை தன்மையை அறிந்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.
அதாவது ஒரு செய்தியை பகிரும் போது அதில் வரும் ஐகான் லென்ஸ் மூலம் இணையத்திற்கு சென்று செய்தியை நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.







