--- --:--:-- --

மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மது வழங்கலாம்!

10.1

ஊரடங்கு காலத்தில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி மது வழங்கலாம் என்ற கேரள அரசின் உத்தரவிற்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.

 

இதனால் கேரளாவில் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் மருத்துவரின் பரிந்துரையுடன் வருவோருக்கு மது வழங்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டனர்.

இதற்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் கேரள மருத்துவ பணியாளர்கள் சங்கம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் எந்த ஆதாரங்களும் இன்றி அரசு தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்தனர் .

 

அரசின் உத்தரவு பேரழிவை உருவாக்கும் என்றும் கூறினார். மேலும் மருத்துவர்களின் பரிந்துரையின் படி மது வழங்கலாம் என்ற உத்தரவிற்கு மூன்று வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon