பப்புவா நியூ கினியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு!!
பப்புவா நியூ கினியா தீவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் இல்லை.
பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றாக பப்புவா நியூ கினியா உள்ளது. இங்கு, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கை. அதேபோல், இன்று காலையும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் தலைநகரான போர்ட் மோர்ஸ்பையில் இருந்து 250 கிமீ தொலைவில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




