--- --:--:-- --

ஏப்ரல் 1-ந் தேதி காலை வரை 144 தடை… 5 பேருக்கு மேல் கூடக் கூடாது…! தமிழக அரசின் அரசாணை கூறுவது என்ன?

2.1

கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கையாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

 

இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ந் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.
அனைத்து அரசு அலுவலகங்களும் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை மூடப்படும். நீதிமன்றம், காவல் துறை உள்ளிட்ட 15 அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும்.ஆசிரியர்கள், கல்வி நிலைய ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும்.

 

பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது. மார்ச் 1-ந் தேதிக்குப் பின் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

 

முதியோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகள், மாற்றுத்திறனாளிகள் மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட வேண்டும்.

 

திட்டமிட்டபடி, இன்று பிளஸ் 2 தேர்வு நடைபெறும். வரும் 26-ம் தேதி நடைபெறவிருந்த பிளஸ் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

 

அரசு, தனியார் பேருந்துகள், ரயில்கள் விமானங்கள் இயங்காது. டாஸ்மாக் கடைகள் இன்று மாலை 6 மணி முதல் மூடப்படும்.

 

திருமண மண்டபங்களில் மார்ச் 16-ம் தேதிக்கு முன்னர் முன்பதிவு செய்யப்பட்ட திருமணங்களுக்கு மட்டுமே அனுமதி . திருமண விழாக்களில் 30 பேர் மட்டுமே பங்கேற்கலாம் .

 

காய்கறி, மளிகை,பால், மருந்து, மீன், இறைச்சி கடைகள் திறந்திருக்கும். உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் வாங்கி செல்லலாம். ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு சப்ளைக்கு தடை .

 

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே யாரும் வெளியே வரவேண்டும் என்பது போன்ற விளக்கங்கள் தலைமைச் செயலர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon