இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரொனாவல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கொரொனா பாதிப்புகள் 471 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பில் கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 7 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். நேற்று மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் அருணாச்சலப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் கொரொனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 470 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் வெளிநாட்டினர் உள்ளிட்ட 74 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் வெளிநாட்டிலிருந்து 67 பேரும், கர்நாடகாவில் 33 பேரும், தெலுங்கானாவில் 32 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரொனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் 548 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.







