--- --:--:-- --

தமிழகத்தில் நாளை முதல் 144 தடையால் என்னென்ன சேவைகள் முடங்கும்..? எவை இயங்கும்..? முதல்வர் அறிவிப்பு முழு விபரம்!!

16

கொரானோ முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் 31-ந் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

 

இது தொடர்பாக முதல்வர் அறிவிப்பில், என்னென்ன சேவைகள் எவையெவை இயங்காது என அவரது பேச்சின் சாராம்சம் வருமாறு:

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

 

அதன்படி, மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

 

இந்த அறிவிப்பை தீவிரமாக அமல்படுத்த 144 சட்டப்பிரிவின் கீழ் ஆட்சியர், காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, கீழ்காணும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

 

1. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார், ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.

 

2. பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர அனைத்து கடைகளும் , வணிக வளாகங்களும் இயங்காது.

 

3. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

 

4. தனியார் நிறுவனங்கள், ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும் அத்தியாவசிய பணிகளையும், மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனஙக்ள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

 

5. அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதி.

 

6. அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை .

 

7. வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கி இருக்கும் பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon