சீனாவில் ஓயந்ததா கொரொனா பாதிப்பு!
சீனாவில் கொரொனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் ஏற்படும் கொரொனா பாதிப்பு தொடர்ந்து நான்காவது நாளாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
முதன் முதலில், கொரொனா வைரஸ் பரவ தொடங்கிய உகானில் தொடர்ந்து நான்காவது நாளாக புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. சனிக்கிழமை வர்த்தக நகரமான ஷாங்காயில் 14 பேர், தலைநகர் பெய்ஜிங்கில் 13 பேர் உட்பட கொரொனா பாதிப்புக்குள்ளான 41 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.







