--- --:--:-- --

எஸ்‌பி‌ஐ சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அவசியமில்லை

7

எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்சம் இருப்புத் தொகையை பராமரிக்க அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் நாற்பத்தி நான்கு கோடியே 51 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன.

 

இவற்றில் பெரு நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் 3 ஆயிரம் ரூபாயும், நகர்ப்புற வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புற வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பராமரிப்பது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களுக்கு அபராதமாக 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வரியுடன் வசூலிக்கப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் புதிய அறிவிப்பின் மூலம் இனி குறைந்தபட்ச இருப்பு தொகை இல்லை என சிபிஐ கூறியுள்ளது. மேலும் எஸ்பிஐ சேமிப்பு கணக்குகளுக்கான ஆண்டு வட்டி விகிதம் 3% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon