--- --:--:-- --

சிஏஏ, என்பிஆர்க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாது

1

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தை ஒத்தி வைத்துவிட்டு கணக்கெடுப்பின்போது ஒத்துழையாமை போராட்டம் நடத்த வேண்டும் என்று சென்னை மண்ணடியில் போராட்டத்தில் ஈடுபடுவோரை திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சென்று கேட்டுக் கொண்டார்.

 

சிஏஏ என்‌பி‌ஆர்க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை மண்ணடியில் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நேரில் சென்று முக ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார்.

 

அப்போது பேசிய ஸ்டாலின் சட்டமன்றத்தில் சி‌ஏ‌ஏ,என்‌பி‌ஆர்க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேறாது என்றார். டெல்லி சென்றிருந்த போது அமைச்சர் ஜெயக்குமாரை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மிரட்டியதாகவும் ஸ்டாலின் கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon