சிங்கத்தை பார்த்து சிதறி ஓடும் மக்கள்..! வைரல் வீடியோ!
குஜராத் மாநிலம் மாதாபூர் கிராமத்தில் புகுந்து உடைய சிங்கத்தை பார்த்து மக்கள் சிதறி ஓடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வன அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் கிராமத்திற்குள் புகுந்த சிங்கம் ஒன்று தனது வழியில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை கடந்து பாய்ந்து ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சிங்கம் தங்களை கடந்து சென்றதை கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.
மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் ஊருக்குள் பாய்ந்து வருவதை எண்ணி பாருங்கள் என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள சுசாந்தா நந்தா அதிவேகமாக ஓடும் உசைன் போல்ட் கூட தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




