குழந்தைகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய நித்யானந்தா
குழந்தைக்கு ஆபாச வீடியோ காட்டியதாக சாமியார் நித்யானந்தா மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த துர்லாபதி என்பவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும், அது தொடர்பாக காவல் நிலையம் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆசிரமத்திற்கு வந்த அவர்கள் குழந்தைகளிடம் அதே வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காட்டி அத்துமீறிய மற்றும் ஆட்சேபரகனமான கேள்வியை எழுப்பியதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் அகமதாபாத்தில் உள்ள விவேகானந்தா நகர் போலீசார் நித்யானந்தா மீதும் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் உள்ளிட்ட 14 பேர் மீதும் போக்சோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




