--- --:--:-- --

உலக மகளிர் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கியர் பைக்குகள் ஒட்டி பேரணியாக சென்ற பெண்கள் – கியர் பைக் ஒட்டுவது மகிழ்ச்சியாகவும், பெருமையாக இருக்கின்றது என பெண்கள் பேட்டி !!!

8

கோவையில் வசித்து பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் பெண்கள் கியர் அப் பைக்ர்ஸ் என்ற பெயரில் ஒன்று சேர்ந்து உலக மகளிர் தினத்தை கொண்டாடினர். முன்னதாக பெண்கள் பல்வேறு துறைகளில் தொடர்ந்து சாதித்து வருவதுபோல் இரண்டு சக்கரம், நான்கு சக்கர மோட்டர் வாகனங்களில் கியர் உள்ள வண்டிகளை இயக்க வேண்டும் என்றும், எந்தவிதமான பிரிவினை மற்றும் பயமின்றி செயல்பட வேண்டும் என்பதை நிரூபிக்கும் வகையில் பீளமேடு சாலையில் இருந்து பல்லடம் வரைக்கும் 30 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் 20க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் தலைகவசம் உள்ளிட்ட் பாதுகாப்பு உபகரணங்களுடன் தேசிய கொடியை ஏந்தி பெண்கள் பேரணியாக வலம் வந்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon