சென்னையில் பெண்கள் பாதுகாப்பு பேரணி..! உற்சாகமாக கொடியசைத்து துவக்கி வைத்த நயன்தாரா!!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு பேரணியை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 

உலகம் முழுவதும் இன்று சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து பெண்களை போற்றி வருகின்றன.

 

இதேபோல் உலகம் முழுவதும் பெண்கள் பங்கேற்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகBம் நடைபெற்று வருகின்றன. பெண்கள் மட்டுமே இயக்கும் விமானம், ரயில் என பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

சென்னையில் மத்திய வருமான வரித்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு பேரணி நடத்தப்பட்டது. இதனை தொடங்கி வைக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பொது விழாக்களில் நயன்தாரா பங்கேற்பது அரிது என்பதால் இந்தப் பேரணியில் பங்கேற்க பெண்கள், குழந்தைகளுடன் இளை ஞர்களும் ஏராளமானோர் திரண்டனர்.

 

ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மேடையில் அமர்ந்து கையசைத்தபடி பேரணி சென்றவர்களை நயன்தாரா உற்சாகப்படுத்தினார்.


Leave a Reply