மகளிர் தினம்! சாதனைப்பெண்களுக்கு பிரதமர் மோடி கௌரவம்!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி யின் ட்விட்டர் கணக்கை ஒரு நாளுக்கு நிர்வகிக்கும் பொறுப்பு பெண் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி மகளிர் தினமான இன்று பெண்சாதனையாளர்கள் பிரதமரின் டுவிட்டர் கணக்கை நிர்வகிப்பார்கள்.
மகளிர் தினத்தில் பெண்களை கவுரவிக்கும் வகையில் தனது சமூக ஊடக கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே கூறியிருந்தார். இதற்கிடையில் பெண் சாதனையாளர் களுக்கும் நாரிசக்தி விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை வழங்க உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




