--- --:--:-- --

மனைவி மேலிருந்த ஆத்திரத்தில் 3 மகள்களை கொன்ற கொடூர தந்தை!

8

தெலுங்கானா மாநிலத்தில் கொடூர கணவர் ஒருவர் மனைவி மீதான ஆத்திரத்தில் 3 மகள்களை ஏரியில் தள்ளி கொலை செய்ததாக போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். காமாரெட்டி மாவட்டம் தாட்கோலி கிராமத்தை சேர்ந்தவர் ஃபயாஸ்.

 

சூதாட்டத்திற்கு அடிமையான இவர் மனைவியிடம் பணம் கேட்டு தராததால் இன்று காலை தனது பத்து வயதிற்குட்பட்ட மகள்கள் அபியா, மகிம், சோயா ஆகியோருடன் ஏரிக்கப் போவதாக அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் மனைவி தேடியபோது மூன்று சிறுமிகளும் தண்ணீரில் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 

போலீசார் விசாரணையில் மனைவி மீதான ஆத்திரத்தில் பெற்ற பிள்ளை என்றும் பாராமல் மூன்று மகள்களையும் ஏரியில் தள்ளி கொலை செய்து தலைமறைவானது தெரிய வந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon