புதுப்பேட்டை 2! செல்வராகவன் வெளியிட்ட அறிவிப்பு! தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகத்தை மீண்டும் அவரை வைத்து எடுக்க இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் அறிவித்துள்ளார். தனுஷ் நடித்து அவரது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.
கேங்க்ஸ்டர் படமான புதுப்பேட்டையில் தனுஷ் நடித்து இருந்த கொக்கி குமார் கதாபாத்திரம் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் பேசிய செல்வராகவன் என்ஜிகே படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் படம் எடுக்க இருப்பதாக அறிவித்தார்.
தனுஷை வைத்து என்ன படம் எடுப்பது என்று நடத்தப்பட்ட ஆலோசனையில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாவது பாகம் எடுப்பது என முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செல்வராகவன் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




