பேராசிரியர் க.அன்பழகன் மறைவு..! அதிமுக சார்பில் இபிஎஸ்., ஓபிஎஸ்., இரங்கல்!!
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவிற்கு அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
திமுகவின் முதுபெரும் தலைவரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான க.அன்பழகன் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவு திமுகவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.கீழ்ப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள க.அன்பழகன் உடலுக்கு தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் , திரையுலகினர், முக்கியப் பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதே போல் க.அன்பழகன் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உள்பட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோல் அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.





