--- --:--:-- --

பெண் குழைந்தையை கொன்ற பெற்றோர்..!

2

இரண்டாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை பெற்றோர் கொலை செய்து புதைத்த அவலம் மதுரை அருகே அரங்கேறியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாய் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

உசிலம்பட்டி அருகே உள்ள புள்ளநெரி கிராமத்தை சேர்ந்தவர் வைரமுருகன், சௌமியா தம்பதியினருக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை இருக்கும் சூழலில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அவர்களுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

இந்நிலையில் குழந்தை திடீரென இறந்து விட்டதாக கூறி வீட்டின் அருகே குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பெண் குழந்தை பிறந்ததால் அவர்களது பெற்றோரை கொலை செய்த சம்பவம் தெரியவந்தது.

 

இதனையடுத்து காவல்துறையினர் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையின் தாத்தா ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon