சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க வேண்டாம்
தங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என சிபிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. விரைவில் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெறப்போவதாக சில பள்ளிகள் விளம்பரம் செய்து மாணவர் சேர்க்கை நடத்தி வருவதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் சிபிஎஸ்இ கூறியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் www.cbse.in என்ற இணையதளத்தில் சென்று அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பள்ளிகளின் பட்டியலை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொதுத் தேர்வு சமயத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போகும் சூழல் மற்றும் அது சார்ந்த புகார்களை தொடர்ந்து இந்த விளக்கத்தை சிபிஎஸ்சி அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




