கோவை, என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த தேசிய அறிவியல் தின விழா போட்டிகளில் திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் கலக்கல்
கோவை, பீளமேடு, காளப்பட்டி ரோட்டில் உள்ள டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி டாக்டர் என்.ஜி.பி கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி பேராசிரியர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு பள்ளிகளுக்கு சென்றனர். பின்னர் தேசிய அறிவியல் தின விழாவில் “அறிவியலில் பெண்கள்” என்ற தலைப்பில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகளை நடத்தினர். அனைத்து அரசு பள்ளிகளிலும் திரளான மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் முதல் மூன்று மாணவர்களை தேர்வு செய்தனர்.
இப்போட்டிகளில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி அனிஷ் ஃபாத்திமா வினாடி- வினா போட்டியில் முதலிடமும், பேச்சு போட்டியில் 2 ஆம் இடமும், 8 ஆம் வகுப்பு மாணவி கனிகாஸ்ரீ பேச்சு போட்டியில் முதலிடமும், கட்டுரை போட்டியில் 2 ஆம் இடமும், 8 ஆம் வகுப்பு மாணவி ஓவிய பிரியா கட்டுரை போட்டியில் முதலிடமும், 8 ஆம் வகுப்பு மாணவி தாரணி வினாடி வினா போட்டியில் 2 ஆம் இடமும், 9 ஆம் வகுப்பு மாணவி நாகஜெயந்தி கட்டுரை போட்டியில் 3 ஆம் இடமும், 8 ஆம் வகுப்பு மாணவி தரணி பேச்சு போட்டியில் 3 ஆம் இடமும், 8 ஆம் வகுப்பு மாணவி முத்துபவித்ரா வினாடி வினா போட்டியில் 3 ஆம் இடமும் பெற்றனர்.

இதனையடுத்து நேற்று டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் தவமணி பழனிசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இ.பி.ஜி பவுண்டேசன் நிறுவனருமான பேராசிரியர் டாக்டர். பாலகுருசாமி மற்றும் சென்னை ஆவடியில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) அதிகாரியும், டாக்டர் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை (பழங்குடியினர்) நிறுவனருமான டாக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணாவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

தொடர்ந்து போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைத்து பரிசுகள் வாங்க ஊக்குவித்த பள்ளிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கக்கப்பட்டது. முடிவில் கல்லூரி டீன் டாக்டர் பாலசுப்பிரமணீயம் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து நேற்று அவிநாசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் நடந்த பாராட்டு விழாவில் பள்ளி தலைமையாசிரியை மெஹருன்னீசா, ஆங்கில ஆசிரியை ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியைகள் மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




